Designed by Iniyas LTD
ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் இன்று நிறைவடைகிறது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 30ஆவது ஆண்டுக் கூட்டம், கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை, கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அன்றைய நாளிலிருந்து ஒரு வார காலத்திற்குப் பின்னர், அமெரிக்காவின் வரைவு அறிக்கை அதனைத் தொடர்ந்து வரைவு தீர்மானம் ஆகியவை வெளியிடப்பட்டன.
நேற்று முன்தினம் 30ஆம் தேதி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு, எதிர்ப்பு இல்லாததால், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக, தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம், இன்று பெரிய அளவிலான அலுவல்கள் இல்லாத நிலையில் நிறைவு பெறுகிறது.