தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ போன் எஸ்.இ. இன் விலை 10,720 இந்திய ரூபா?

201604060728206893_iPhone-SE-costs-Apple-around-Rs-10720-to-make-IHS_SECVPFஐ.எச்.எஸ். என்ற நிறுவனம் ஐபோன் எஸ்.இ. தயாரிக்க ஆகும் மொத்த செலவு பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுப்படி ரூ.39,000-க்கு விற்கப்படும் ஐபோன் எஸ்.இ.(16ஜி.பி) போனின் தயாரிப்பு செலவு 10,720 ரூபாய்தான் என்று தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் எஸ்.இ. என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அமெரிக்காவில் இந்த போனின் விலை 399 டாலர்கள். இது இந்திய மதிப்பில் ரூ.39,000 ஆகும்.

ஐபோன் எஸ்.இ. போன் “64-பிட் ஆப்பிள் ஏ9 செயலி, 4 இஞ்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங், 1 ஜி.பி. ரேம், 12 மெகா பிக்சல் கேமரா, Hey Siri, லைவ் போட்டோ, 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. சேமிப்பு” ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 

இந்நிலையில் ஐ.எச்.எஸ். என்ற நிறுவனம் ஐபோன் எஸ்.இ. தயாரிக்க ஆகும் மொத்த செலவு பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுப்படி ரூ.39,000-க்கு விற்கப்படும் ஐபோன் எஸ்.இ.(16ஜி.பி) போனின் தயாரிப்பு செலவு 10,720 ரூபாய்தான் என்று தெரியவந்துள்ளது. 

ஆனால் ஐபோன் எஸ்.இ. தயாரிப்புக்கு ஆகும் 10,720 ரூபாயில் மென்பொருள் விலை, ஆராய்ச்சி, சந்தைப்படுத்துதல், விநியோகம், இதர வரி மற்றும் கட்டணங்கள் ஆகியவை அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...