தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.ஸ்.ஐ.எஸ் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் ஒருவர் கொலை…

ஐ.ஸ்.ஐ.எஸ் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் ஹாதில் என்ற நபரே அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் முஸ்லிம் அடிப்படைவாத நடவடிக்கைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...