Designed by Iniyas LTD
ஒட்டுசுட்டான் தேர்திருவிழாவில் திருடர்கள் கைவரிசை பொலீஸாரிடம் சிக்கினர்..
வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுடுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் திருவிழா நிழக்வுகள் சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நேற்றையதினம் தேர்த்திருவிழா சிறப்புற நடைபெற்றுள்ளது மாலை 3.30 மணியளவில் பலஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையுடன் தேர் இழுக்கப்பட்டு வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இன்னிலையில் இந்த தேர்திருவிழாவின் போது நான்கு செயின்கள் மற்றும் ஒரு தாலிக்கொடி என்பன திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பொலீசில் தெரிவித்துள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் பொலீஸாரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இறுதியா மேற்கொள்ளப்பட்ட திருட்டுடன் தொடர்பைவைத்து சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் உள்ளிட்ட எட்டு பேர்வரை கைதுசெய்துள்ளார்கள்.
தொடர்புடைய பதிவு
கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

