தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்! மணல் அகழ்வு தொடர்பில் நீண்ட நேரம் விவாதம்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று காலை  9.30 மணிக்கு இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான  வைத்தியகலாநிதி சி சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான  வைத்தியகலாநிதி சி சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் வடமாகாண சபை உறுப்பினர்களான ஆ.புவனேஸ்வரன் து.ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்த் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்  பிரதேச செயலாளர் ம பிரதீபன் உதவி பிரதேச செயலாளர் இ ரமேஸ்உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள் அரச அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இடம்பெறும் மணல்  அகழ்வு தொடர்பில் பலமணிநேரம் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றது இதில் குறிப்பாக உள்ளூர் விண்ணப்பங்களை பிரதேச செயலகம் சிபார்சு செய்து அனுப்பிய பின்னரும் ஏனைய திணைக்களங்கள்  இழுத்தடித்து வருவதாகவும் ஏனைய வெளிமாவட்ட விண்ணப்பதாரிகளுக்கு உடனடியாக அனுமதிகள் வழங்குவதாகவும் இவற்றை நிறுத்தி உள்ளூர் மக்களுக்கு குறித்த அனுமதியை வழங்குமாறும் குறித்த மணல் அகழ்வு தொடர்பில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோத செயற்ப்பாடுகள் தொடர்பிலும்  கருத்து தெரிவிக்கப்பட்டது.

வெளிமாவட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதிகள் நிறுத்துமாறு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் அதைமீறி இந்த அனுமதிகள் எவ்வாறு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டது இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாதது இருப்பது இன்னும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

Comments
Loading...