Designed by Iniyas LTD
ஒப்போ நிறுவனத்தின் புது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்!
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஏ53எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ மற்றும் இன்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,990 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,990 ஆகும்.
இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆன்லைன் தளங்களில் மே 2 ஆம் தேதி துவங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பல சிறம்பங்களை உள்ளடக்கியுள்ளது.
- 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி