தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரு நாள் கிரிக்கெட்டில் மே.இ தீவுகளை வீழ்த்தியது அவுஸ்த்ரேலியா!

1113 நாடுகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் மேற்­கிந்­தியத் தீவு­ களில் நடை­பெற்று வரு­கி­றது.
இதன் தொடக்க போட்­டி யில் மேற்­கிந்­தியத் தீவுகள் 4 விக்கெட்­டுக்கள் வித்­தி­யாசத்தில் தென்­னா­பி­ரிக்­காவை வீழ்த்­தி­யது. நேற்­று­முன்­தினம் நடந்த 2-ஆவது போட்­டியில் அவுஸ்­தி­ரே­லிய மற்றும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 32.3 ஓவர்­களில் 116 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது. சார்லஸ் அதி­க­பட்­ச­மாக 22 ஓட்­டங்­களை எடுத்தார். ஆஸி.யின் அடம் ஜம்பா, நாதன் லயன் தலா 3 விக்­கெட்­டுக்­க­ளை வீழ்த்­தினர்.
பின்னர் துடுப்பெடுத்தா டிய அவுஸ்­தி­ரே­லியா 25.4 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்கள் இழப்­பிற்கு 117 ஓட்­டங்­களை எடுத்து 6 விக்­கெட்டுக்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் வோர்னர் 55 பந்­து­களில் 55 ஓட்­டங்­களை விளா­சினார். இதில் 3 பவுண்­ட­ரி­களும், ஒரு சிக்­ஸரும் அடங்கும். இன்று நடக்கும் 3-ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா- மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.

Comments
Loading...