Designed by Iniyas LTD
ஒரு நாள் பரோலில் செல்ல நளினிக்கு நீதிமன்று அனுமதி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தனது தந்தையில் நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 24 மணிநேர பரோலில் செல்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
3 நாட்களுக்கு அவர், பரோல் கோரியிருந்த போதும் அவருக்கு 24 மணிநேர பரோலே வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4 மணியிலிருந்து, நாளை பிற்பகல் 4 மணிவரையுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரது தந்தை உயிரிழந்த தினத்தன்று, 15 மணிநேர பரோலில் செல்ல நளினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது தந்தை உயிரிழந்து, நாளையுடன் 16 நாட்களாகின்றமை குறிப்பிடத்தக்கது.