Designed by Iniyas LTD
ஒரு வருடத்துக்குள் 470 அகதிகள் தாயகம் திரும்பினர்!
2015ஆம் ஆண்டிலிருந்து, இவ்வாண்டு ஜனவரி 26ஆம் திகதி வரையிலும் தமிழ் அகதிகள் 470 பேர், தமிழ்நாட்டிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர் என்று இலங்கை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவிலுள்ள 109 முகாம்களில்; 64,000 பேர் இன்னும் இருக்கின்றனர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து இறுதியாக, கடந்த 26ஆம் திகதியன்று 20 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளனர். அந்த 20 பேரில், 12 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் குடியமர்த்தப்படுவர் என்று, அவ்வமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.