Designed by Iniyas LTD
ஒரே நாள் இரவில் ரிசப் பாண்ட் அடுத்த டோனி என உருவெடுத்துள்ளார்.
டேவிட் வார்னர், விரேந்தர் சேவக், கவுதம் கம்பீர், கெவின் பீட்டர்சன், யுவராஜ் சிங் என பல வீரர்களை கொண்டது தான் டெல்லி அணி.
இந்த 10 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்த அதிரடி துடுப்பாட்டக்காரர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு ஒருவர் தற்போதைய டெல்லி அணியில் உள்ளார்; அவர்தான் அடுத்த டோனி என வர்ணிக்கப்படும் ரிசப் பாண்ட்.
பத்தாவது ஐ.பி.எல். தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின.இதில் குஜராத் அணி, டெல்லி அணிக்கு 208 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, முதல் விக்கெட்டை (கருண் நாயர்) விரைவாக இழந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் ரிசப் பாண்ட், பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் விளாசித் தள்ளினர்.
இந்த ஜோடி, 143 ஓட்டங்களை குவித்தது, சாம்சன் 31 பந்துகளில் 61 ஓட்டங்களும், பன்ட் 43 பந்துகளில் 97 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இருப்பினும் இந்த இருவர்களின் அதிரடியால், 17.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது டெல்லி அணி. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிசப் பாண்டிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் திரை உலகில் இருந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.
அதுமட்டுமின்றி தற்போது ரிசப் பாண்டை சமூகவலைத்தளங்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.