தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒற்றையாட்சி நீடித்தால் நாடு இரண்டாக பிரியும்!

10872343_10204739813429625_8705604_nஒற்­றை­யாட்சி நீடித்தால் நாடு பிள­வ­டை­வ­தற்­கான ஆபத்து உள்­ளது. எனவே, ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டி அடிப்­ப­டை யில் ஆட்சி அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்­டு­மென எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஒற்­றை­யாட்சி, சமஷ்டி போன்ற முத்­தி­ரை­க­ளுக்கு அப்­பா­லான கருப்­பொ­ரு­ளி­லேயே அதிக கவனம் செலுத்­து­கின்றோம். பேரி­ன­வாதக் கொள்­கை­களை கைவிட்டு தற்­போது ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் செயற்­பாட்­டுக்கு அனை­வரும் ஒத்­து­ழைக்­க­ வேண்­டு­மெ­னவும் கூட்­ட­மைப்பு அழைப்பு விடுத்­துள்­ளது.

அர­சியல் தீர்வு தொடர்­பாக தமிழ் மக்கள் பேரவை உட்­பட அனைத்து தரப்­புக்­களின் பரிந்­து­ரை­க­ளையும் பரி­சீ­லிக்க தயா­ரா­க­வுள்ளோம். மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட எந்த யோச­னை­யையும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை எனவும் எதிர்க்­கட்சி உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளது.

கொழும்பில் அமைந்­துள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்டு வரு­ட­மொன்று பூத்­தி­யா­கி­யுள்ள நிலையில் குறித்த திக­தி­யன்று பிர­த­மரால் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான பிரே­ர­ணை­யொன்று சமர்ப்­பிக்­க­பட்­டுள்­ளது.

கடந்த கால கசப்­பு­ணர்­வு­களை மறந்து முன்­னே­ற­வேண்­டு­மா­க­வி­ருந்தால் மூன்­றா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு மிக­முக்­கி­ய­மா­ன­தாகும். இந்த அர­சி­ய­ல­மைப்பே இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வுகள் தொடர்­பி­லான புதிய முறை­மையை அறி­முகம் செய்­வ­தா­கவும் இருக்கும்.

நாடு சுதந்­த­ர­ம­டைந்த காலம் முதல் எண்­ணிக்­கையில் சிறு­பான்­மை­யா­க­வி­ருக்கும் மக்கள் சம அந்­தஸ்­துள்ள பிர­ஜை­க­ளாக வாழ­மு­டி­யாது பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அனைத்துப் பிரச்­சி­னை­களும் தீர்ந்­து­வி­டு­மென நாம் கூறு­வ­தில்லை. அர­சி­ல­மைப்பை மாற்­று­வதன் ஊடா­கவும் புதிய உற­வு­மு­றையை ஏற்­ப­டுத்­து­வதன் மூல­மா­கவும் தீர்­வுக்­கான ஆரம்­பத்தை ஏற்­ப­டுத்­தலாம் என்­பதன் அடிப்­ப­டையில் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான பொறி­முயை தொடர்­பான விவாதம் தொடர்ச்­சி­யாக பிற்­போட்டு வரு­கின்­றமை துர­திஷ்­ட­வ­ச­மா­னது. ஒன்­பதாம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட விவாதம் பிற்­போ­டப்­பட்டு பெப்­ர­வ­ரியில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வி­ருப்­ப­தாக கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பு பொறி­மு­றையை உரு­வாக்­கு­வதில் அனை­வரும் ஒன்­று­பட்டு பங்­க­ளிப்பை செய்­ய­வேண்­டு­மென ஜனா­தி­பதி கரி­சணை காட்­டு­வ­த­னா­லேயே இவ்­வாறு பிற்­போ­டப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­ப­தியின் இந்த நியா­ய­மான கரி­ச­னையை உண­ராது பிற்­போக்கு சக்­திகள் அதனை தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­து­வதை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும்.

நாட்­டி­லுள்ள பிற்­போக்கு சக்­தி­க­ளுக்கு இட­ம­ளிக்கும் வகையில் அர­சாங்கம் முன்­வைத்த காலை பின் வைக்­காது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான பணி­களை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென நாம் வலி­யு­றுத்­து­கின்றோம்.

எமது பங்கு

எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நல்­ல­வி­த­மான செயற்­பா­டு­க­ளுக்கு ஆக்­க­பூர்­வ­மான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வந்­தி­ருக்­கின்றோம். கடந்த ஒரு­வ­ருட காலத்தில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறை­வாக இருந்­தாலும் கூட தொடர்ச்­சி­யாக அச்­செ­யற்­பா­டுகள் முன்­னெ­டுக்க வேண்­டு­மெனக் கோரு­கின்றோம்.

அனைத்து தரப்­புக்­களின் ஒப்­பு­த­லுடன் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­காக அப்­பி­ரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்கள் மலி­னப்­ப­டுத்­தப்­ப­டாது முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும்.

அதி­கா­ரப்­ப­கிர்வு

அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது இந்த நாட்­டிலே புதிய விட­ய­மொன்­றல்ல. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து ஒரு­வ­ரு­ட­கா­லத்­தி­னுள்­ளேயே கோரப்­பட்­ட­தொன்­றாகும். பெரும்­பான்மை வாக்­கு­களால் தீர்­மா­னங்­களை எடுக்கும் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதால் குறித்த மக்­களின் பிர­ஜா­வு­ரி­மையே பறிக்­கப்­பட்­டது.

1949 ஆம் ஆண்டு தமி­ழ­ர­சுக்­கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு ஆட்சி அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டு சமஷ்டி முறை­யி­லான ஆட்சி கொண்­டு­வ­ர­வேண்­டு­மென கோரிக்கை விடப்­பட்­டது. தற்­போது பல உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு பின்னர் ஆட்சி அதி­கா­ரங்­களை அனை­வரும் கையா­ளக்­கூ­டிய வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு அவ­சி­ய­மென்­பது உண­ரப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே அவ்­வி­டயம் தாம­திக்­கப்­ப­டாது முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.

மக்கள் ஆணை

அர­சியல் தீர்வு தொடர்­பாக எமது நிலைப்­பாட்டை நாம் கடந்த பொதுத்­தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்ளோம். அந்த நிலைப்­பா­டா­னது முதல்­மு­றை­யாக வைக்­கப்­பட்­ட­தொன்­றல்ல. 2010ஆம் ஆண்டு முதல் மக்கள் மத்­தியில் முன்­வைக்­கப்­பட்டு ஆணை பெறப்­பட்டு வந்­துள்­ளது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் 2015ஆம் ஆண்டு எம்மால் முன்­வைக்­கப்­பட்ட அர­சியல் தீர்வு தொடர்­பான நிலைப்­பா­டங்­கிய விஞ்­ஞா­ப­னத்­தினை ஏற்று மிகப்­பெ­ரும்­பான்­மை­யாக வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள்.

வடக்கு கிழக்கு மக்கள் ஐக்­கிய இலங்­கைக்குள் அதி­கா­ரங்கள் பகி­ருங்கள் எனக்­கோ­ரிக்கை விடுத்து தமது அர­சியல் அபி­லா­ஷை­களை இவ்­வாறு வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் அதனைத் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. செவி­சாய்க்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்கள் இவ்­வாறு தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் எண்­ணிக்­கையை தட்­டிக்­க­ழிக்­காது ஜன­நா­யக ரீதி­யாக தீர்­வு­கா­ண­வேண்டும். பேரி­ன­வா­தத்­தினால் அமிழ்த்­தப்­ப­டக்­கூ­டாது.

பேரி­ன­வா­தக்­கொள்கை

பேரி­ன­வா­தக்­கொள்­கை­யினால் 1972ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போது அர­சி­ய­ல­மைப்புச் சபையில் பெரும்­பான்மை எண்­ணிக்­கையால் சொற்ப அதி­கா­ர­ப­கிர்வு கூட நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­தின்­போதும் தமிழ் மக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. முதன் முறை­யாக தற்­போது அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் மக்கள் பங்கு பற்­று­கின்­றார்கள். நாம் முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்கி ஒத்­து­ழைப்­பு­களை நல்க தயா­ரா­க­வுள்ளோம். இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்ள நிலையில் இந்தச் வர­லாற்று ரீதி­யான சந்­தர்ப்பம் கைவி­டப்­ப­டக்­கூ­டாது.

தமிழ் மக்கள் ஐக்­கிய இலங்­கைக்குள் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு முன்­வந்­துள்ள நிலையில் இச்­சந்­தர்ப்­பத்தை கைந­ழுவ விடக்­கூ­டா­தென பெரும்­பான்மை மக்­களும் தமது தலை­வர்­க­ளுக்கு அழுத்­த­ம­ளிக்­க­வேண்டும்.

சமஷ்டி, ஒற்­றை­யாட்சி

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவே 1926ஆம் ஆண்டு இந்த நாட்டில் சமஷ்டி என்ற வார்த்­தையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யவர். அப்­போது வெளி­வந்­தி­ருந்த சிலோன் மோர்னிங் லீடர் பத்­தி­ரி­கையில் ஐந்து கட்­டு­ரை­களை எழு­தி­யி­ருந்­த­தோடு யாழில் விசேட சொற்­பொ­ழி­வையும் ஆற்­றி­யி­ருந்தார். சுவிட்­சர்­லாந்தில் உள்ள சமஷ்டி முறைமை இலங்­கைக்கு பொருத்­த­மா­ன­தெ­னவும் கூறி­யி­ருந்தார்.

1931ஆம் ஆண்டு கண்­டியத் தலை­வர்கள் டொனமூர் மற்றும் சோல்­பரி ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு முன்னால் சமஷ்­டியை ஆத­ரித்­தி­ருந்­தார்கள். தீர்­வாக கூறி­னார்கள். ஆகவே சிங்­கள மக்கள் சமஷ்­டியை எதிர்க்­கின்­றார்கள் என்­று­கூ­று­வ­தற்­கில்லை.

நாடு பிளவு படா­தி­ருக்க வேண்­டு­மென சிலர் கரு­து­வதால் தான் ஒற்­றை­யாட்சி என்ற பதம் பிர­தா­ன­மாக இருக்­க­வேண்­டு­மென கரு­து­கின்­றார்கள். ஆட்சி அதி­கா­ரங்கள் சமஷ்டி அடிப்­ப­டையில் பகி­ரப்­பட்டால் நாடு பிளவு படு­வ­தற்கு வாய்ப்­பில்லை, தேவையும் ஏற்­ப­டாது. ஒற்­றை­யாட்­சி­யி­ருந்­தாலே நாடு­பி­ள­வு­ப­டு­வ­தற்­கான அபா­ய­முண்டு. இதுவே எமது உறு­தி­யான நிலைப்­பாடு. இதனை பிர­தான கட்­சி­க­ளுக்கும், பெரும்­பான்மை மக்­க­ளுக்கும் எடுத்­துக்­கூ­றுவோம்.

முத்­தி­ரைகள் அவ­சி­ய­மில்லை

அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வது குறித்த செயற்­பாட்டில் ஒற்­றை­யாட்சி, சமஷ்டி போன்ற முத்­தி­ரைகள் அவ­சி­ய­மில்லை. கருப்­பொருள் தொடர்­பி­லேயே நாம் அதி­க­மான கவ­னத்தைச் செலுத்­துவோம். அவ்­வா­றான முத்­தி­ரை­களின் அவ­சி­யமும் சில சம­யங்­களில் தேவைப்­ப­டலாம். அத­னை­வி­டவும் கருப்­பொருள் மிகவும் முடி­யாது.

தமிழ் மக்கள் பேரவை

அர­சியல் தீர்வு தொடர்­பாக தமிழ் மக்கள் பேரவை மட்­டு­மல்ல. எந்த தரப்­பா­க­வி­ருந்­தாலும் அவர்­களின் யோசனை எம்­மி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­டு­மி­டத்தில் அதனை பரி­சீ­லிப்­ப­தற்கு தயா­ரா­க­வுள்ளோம்.

மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றி­வ­தற்கு அர­சாங்கம் குழுவை நிய­மித்­தி­ருக்­கின்­றது. அவர்கள் அங்கும் தமது கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார்கள். எம்­மி­டத்­திலும் தெரி­விக்­கின்­றார்கள்.

தமிழ் மக்­களின் ஆணையை சுமந்து நிற்கும் அர­சியல் கட்­சி­யா­க­வி­ருக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் அதற்­கி­ணங்­கவே செயற்­படும். அந்த ஆணைக்கு மாறான கருத்­துக்கள் எமக்கு வழங்­கப்­பட்டால் அதனை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம்.

தமிழ் மக்கள் நிரா­க­ரித்த தீர்வு திட்­டங்கள் அதி­க­முள்­ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி மக்கள் மத்­தியில் முன்­வைத்த தீர்வு திட்­டங்கள் தொடர்ச்­சி­யாக நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வாறு நிரா­க­ரிக்­கப்­பட்ட திட்­டங்­களை வேறொரு அமைப்பின் ஊடா­கவோ வடி­வத்­தி­லேயோ முன்­வைத்தால் ஏற்­க­மட்டோம். ஆக்­க­பூர்­வ­மான கருத்­துக்­களை உள்­வாங்­கு­வ­தற்கு தயா­ரா­கவே உள்ளோம்.

கலந்­து­ரை­யாடல்

அர­சியல் தீர்வு தொடர்­பாக உத்­தி­யோ­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யாடல் எவையும் நடை­பெ­ற­வில்லை. எனினும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பின்­னரும், அண்­மைக்­கா­லத்­திலும் சில பேச்­சுக்கள் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

பதிவு முக்­கி­ய­மில்லை

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை அர­சியல் கட்­சி­யாக பதி­வது என்­பது முக்­கி­ய­மான விட­ய­மல்ல. 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கூட்­ட­மைப்­பாக செயற்­ப­டு­கின்றோம். 225 பிர­தி­நி­தித்­து­வத்தில் இந்த எண்­ணிக்கை முக்­கி­ய­மா­ன­தாக இல்­லாது விட்­டாலும் தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்புடனேயே தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். கூட்டமைப்பை விட்டு எந்த தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றினாலும் அது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது.

பேச்சுக்கள் தொடரும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட தரப்புக்களுடனும் அரசியல் திர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம்.

அரசியல் கைதிகள்

அரசில் கைதிகள் விடுதலை தொடர்பாக செயற்பாடுகளில் சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் திருப்திகரமாகவில்லை. புதிய சட்டமா அதிபர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் முன்னெடுக்கப்படும். நாம் தொடர்ச்சியாக அழுத்தங்களை வழங்கிவருவதோடு பேச்சுக்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

நீலன் – பீரிஸ் வரைவு

2000ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இணைந்து உருவாக்கிய நகல் வரைவுக்கு அப்போதைய அமைச்சரவையும் அங்கீகாரமளித்திருந்தது. அந்த அமைச்சரவையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அமைச்சராக இருந்தார்.

அக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப்பகிர்வு விடயம் தொடர்பில் அவ்வரைபில் குறிப்பிட்ட விடயத்திற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்வதையே எதிர்த்தார்கள். ஆகவே அதனை அடிப்படையாக வைத்துப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாரகவுள்ளோம் என்றார்.

Comments
Loading...