தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒலிம்பிக் போட்டி தர வரிசையில் சாய்னாவுக்கு 5ஆவது இடம்

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளின் போட்டித் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. பெண்கள் ஒற்றையரில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நேவாலுக்கு 5-வது இடமும், பி.வி.சிந்துவுக்கு 9-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.   உலக சாம்பியன் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக வலம் வருகிறார்.saina

2-வது இடத்தை சீனாவின் வாங் யுஹானும், 3-வது இடத்தை நடப்பு சாம்பியன் சீனாவின் லி சூய்ருயும், 4-வது இடத்தை தாய்லாந்தின் ராட்சானோக்கும் பெற்றுள்ளனர்.  ஆண்கள் ஒற்றையரில் மலேசிய வீரர் லீ சோங் வெய் முதலிடமும், இரண்டு முறை உலக சாம்பியனான சென் லாங் (சீனா) 2-வது இடமும், இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான லின் டான் (சீனா) 3-வது இடமும் பெற்று இருக்கிறார்கள். இந்திய வீரர் ஸ்ரீகாந்துக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. தொடக்க சுற்றில் யார்-யாருடன் மோதுவார்கள் என்பது வருகிற 26-ந்தேதி அறிவிக்கப்படும்.

Comments
Loading...