Designed by Iniyas LTD
ஒவ்வொரு மணித்தியாலத்தில் காசாவில் 3 சிறுவர்கள் காயம்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் ஒவ்வொரு மனித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
‘காசாவில் 366 சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதன்படி மோதல் ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று சிறுவர்கள் காயமடைந்து வருகின்றனர்’ என்று அந்த தொண்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘ஒரு வாரத்தில் காசாவில் கிட்டத்தட்ட 60 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கு இன்னும் எத்தனை குடும்பங்கள் அன்புக்குரியவர்களை இழக்க வேண்டும்? வானில் இருந்து குண்டுகள் தமது வீட்டை நோக்கி விழும்போது அந்த சிறுவர்கள் எங்கே ஓடுவார்கள்?’ என்று சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பின் காசாவுக்கான பணிப்பாளர் ஜேசன் லீ கேள்வி எழுப்பியுள்ளார்.