தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா, ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா, ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. 2006ம் ஆண்டு சாம்பியனும், உலகின் 5ம் நிலை வீராங்கனையுமான மரியா ஷரபோவா (ரஷியா) தொடக்க சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த கிரிலென்கோவை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6–4, 6–0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.sharapova_jkokovic_001

அதே போல் உலகின் முதன்மை வீரரும், 2011ம் ஆண்டு சாம்பியனுமான ஜோகோவிக் (செர்பியா) முதல் சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிக் 6–1, 6–2, 6–4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Comments
Loading...