தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கச்சத்தீவு திருவிழாவில் ஈழ அகதிகள் கலந்துகொள்ள தடை??

எதிா்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள கச்சதீவு திருவிழா பாதுகாப்பு குறித்த முதல் கட்ட ஆலோசணைக்கூட்டம் இன்று(27) நடைபெற்றது.
கச்சதீவில் அமைந்துள்ள புனிதஅந்தோணியார் தேவலாயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய-.இலங்கை பக்தர்களின் மத நல்லிணக்க விழா எதிா்வரும் பிப்ரவரி மாதம் 23 ,மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதை தொடர்ந்து விழாவிற்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து இன்று இராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் பேபி, கடலோர காவல்படை, கடற்படை மத்திய உளவுத்துறை, கியூபிரிவு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொெண்டனா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் கோட்டாச்சியர்
எதிா்வரும் 23,மற்றும் 24 திகதிகளில் கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற உள்ளது.
காவல்துறையினரின் தடையில்லா சான்று பெற்றவர்கள் விழாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.
விழாவிற்கு செல்லக்கூடிய பக்தர்கள் அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியமாக இருக்க வேண்டும்.
மேலும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி கிடையாது எனவும் மேலும் தடை செய்யப்பட்ட பொலீத்தீன் பொருட்கள் போதைப் பொருட்கள் மற்றும் கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது எனத்தெரிவித்தார்.
மேலும் அவர் கச்சத்தீவுக்குச் செல்லும் பயணிகள் குறித்த முழு விசாரணை நடத்தப்பட்டு அதன் விபரம் கிடைத்த பின் அவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தாா்.
மேலும் பாதுகாப்பு நலன் கருதி பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரை மட்டுமே மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...