Designed by Iniyas LTD
கஞ்சாவியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் – மக்கள் கவலை…
யாழ். வல்வெட்டித்துறையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் 110 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் வல்வை மகன் என அழைக்கப்படும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை சண்முகவேல் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் கடந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டிருந்தார்.
இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்ன்னர் தமிழரசுக் கட்சி நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரை,
தனது தலையீட்டினால் பொலிசாரிடமிருந்து விடுவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
இந்நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகளே கஞ்சாவியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டால் கஞ்சாவினை ஒழிப்பது எவ்வாறு என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
