தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 69 கைதிகள் மரணம் அடைந்துள்ளனர்

தமிழக சிறைகளில் கடந்த ஆண்டில் மட்டும் 69 பேர் மரணம் அடைந்துள்ளதாக தமிழக உள்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.deah

இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த கேசவன் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம். சத்திய நாராயணன் முன்னதாக நடைபெற்றது.

கேசவன் தனது மனுவில் கடந்த 2000த்திலிருந்து 1095 கைதிகள் இயற்கைக்கு மாறான முறையில் மரணம் அடைந்துள்ளதாகவும் இவர்கள் மருத்துவ உதவியின்றி இறந்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக சட்ட சேவைகள் அமைப்பிற்கு இத்தகவல்களை உறுதிப்படுத்தி 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப் பிக்குமாறு உத்தரவிட்டனர்.

இவ்விசாரணையின் போது தமிழக உள்துறை கடந்த ஆண்டில் மட்டும் 69 பேர் மரணமடைந்ததாக பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. கடந்த 2012 ல் சிறை மரணங்கள் 62 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...