Designed by Iniyas LTD
கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய மாலுமிகள் மீட்பு!
ஆப்பிரிக்க நாடான ஐவோரி கோஸ்ட் கடலில் சென்ற ‘மேக்சிமஸ்’ என்ற கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளையும், ஒரு பாகிஸ்தான் மாலுமியையும் கடற்கொள்ளையர்கள் கடந்த சனிக்கிழமை கடத்திச்சென்றனர்.
இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நைஜீரிய ராணுவத்தை இந்தியா கேட்டுக்கொண்டு இருந்தது.
இதனையடுத்து கடற்கொள்ளையர்களிடம் சிக்கியவர்களில் 10 இந்திய மாலுமிகள் நைஜீரிய கடற்படையினரால் மீட்கப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மாசுவராஜ் தெரிவித்து உள்ளார். மற்றவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.