Designed by Iniyas LTD
கடற்படையின் சித்திரவதை முகாம் செல்கிறார் அல் ஹூசைன்!
திருகோணமலையில் உள்ள இரகசிய சித்திரவதை முகாமினை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு செல்லும் அவர் இந்த சித்திரவதை முகாமினையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரகசிய சித்திரவதை முகாம் ஸ்ரீலங்கா கடற்படை முகாமில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்கள் இதனை கண்டறிந்து வெளியுலகிற்கு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் விசாரணை நடத்துவதற்காகவே அவர் திருமலை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.