Designed by Iniyas LTD
கடலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேர்தல் முடியும் வரை, டிராக்டர்களை பறிமுதல் செய்யக்கூடாது என வலியுறுத்தி, சென்னையில் கடலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
சென்னை மெரினா கடற்கரையில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பெண்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில செயலாளர் ரவீந்திரன், தேர்தல் முடியும் வரை விவசாயிகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்யக்கூடாது என கோரிக்கை வைத்தார்.
மேலும் தேர்தலுக்குப்பின்னர் பொறுப்பேற்கும் அரசு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 5ம் தேதி மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் ரவீந்திரன் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.