Designed by Iniyas LTD
கடலூரில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில், நாளையும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால், கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளநீர் வடியாத காரணத்தினாலும், மீட்பு பணிகள் நடைபெறுவதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்படுவதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.