Designed by Iniyas LTD
கட்சிக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க வேண்டும் – லக்ஷ்மன் யாப்பா (Video)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைக்க 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீ.சு.க வின் மாதாந்த கூட்டத்தின் போதே இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கட்சியின் பணிகளை செய்யாதவர்களை, கட்சிக்கு தீங்கு விளைவிப்பவர்களை கட்சியிலிருந்து அகற்றி அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.