Designed by Iniyas LTD
கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் இங்கிலாந்து அணி
அவுஸ்திரேலியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி புயல் மழை காரணமாக கைவிடப்பட்டதால் இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரிஸ்பனில் நடக்கவிருந்த அவுஸ்திரேலியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி, நேற்று கடும் புயல் மழை காரணமாக கைவிடப்பட்டது.
புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதால் தற்போது அவுஸ்திரேலியா, வங்கதேச அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதனால் அட்டவணையில் கடைசி நிலையில் உள்ள இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வங்கதேச அணியின் அணித்தலைவர் மஷ்ரபே மோர்டசா, இன்னும் 2 அல்லது 3 போட்டிகளில் வென்றால் போதும் எனவும், அதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளதால், மீதமுள்ள போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது.