தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கட்டில், டேபிள் பேன், குளியலறையோடு கூடிய அறை வேண்டும் – சிறையில் சசிகலா கோரிக்கை

sasi-1சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுரு பரப்பன அக்ராஹரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை பெங்களுரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அ.தி.மு.க. வக்கீல்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சிறையில் மேம்பட்ட வசதிகள் வேண்டும் என சசிகலா சார்பில் மனுசெய்யப்பட்டு உள்ளது என என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது.. தனது வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு மேம்பட்ட வசதி வழங்கவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேம்பட்ட வசதிகளில் கட்டில்,மெத்தை, டேபிள் பேன் மற்றும் குளியலறையுடன் கூடிய அறை வேண்டும் என கேட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Comments
Loading...