தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கணவன் மனைவி தற்கொலை முயற்சி! மனைவி பலி

0812-300x225ஸ்ரீலங்கா பிரதி அமைச்சர் ஒருவரின் இணைப்பு செயலாளர் ஒருவர் தனது மனைவியுடன் இணைந்து தனக்கு தானே தீயிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

இதில் தீக்காயங்களுக்குள்ளான பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இச்சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் பாணந்துரை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தனிப்பட்ட பிரச்சினையொன்றின் காரணமாகவே குறித்த இருவரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...