Designed by Iniyas LTD
கண்டாவளை மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம்!
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாதன் குடியிருப்பு மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி நாதன் குடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது.கண்டாவளை – நாதன் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 313 குடும்பங்களுக்கு கடந்த 40 வருடங்களுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை நல்லாட்சி அரசின் ஏற்பாட்டில் 190 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள 123 பேருக்கு அடுத்த கட்டத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
தொடர்புடைய பதிவு
இதன்போது, கண்டாவளை பிரதேச செயலாளர் முகுந்தன் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
