Designed by Iniyas LTD
கண்ணை இமைத்தால் வீடியோ பதிவாகும் நவீன கண் வில்லை!
கண்ணை இமைப்பதன் மூலம் காணொளிக் காட்சிகளைப் பதிவு செய்யவும் காட்சிப்படுத்தவும் கூடிய வல்லமையைக் கொண்ட மதிநுட்ப கண் வில்லைகளை கண்டுபிடித்துள்ளதாக ஜப்பானிய டோக்கியோ நகரை அடிப்படையாகக் கொண்ட சோனி நிறுவனம் தெரிவிக்கிறது.
புகைப்படக்கருவி, கம்பியில்லா செயற்கிரம அலகு மற்றும் சேமிப்பகம் என்பவற்றை உள்ளடக்கிய இந்த கண் வில்லைகளை சோனி நிறுவனத்தைச் சேர்ந்த 7 நிபுணர்கள் ஒருங்கிணைத்து வடிவமைத்துள்ளனர்.
ஏற்கனவே சம்சுங் நிறுவனத்தால் உரித்துடைமை கோரப்பட்டிருந்த மதிநுட்ப கண் வில்லைகளை விடவும் இவை முன்னேற்றகரமானவையாகும். சம்சுங் நிறுவனத்தின் வில்லைகள் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்ற நிலையில், சோனி நிறுவனத்தின் கண் வில்லைகள் சுயமாக சொந்தக் காணொளிக் காட்சியை பதிவு செய்து காட்சிப்படுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமையாக கண்ணிமைக்கும் நேரம் 0.2 செக்கன்களிலிருந்து 0.4 செக்கன்களாகும். இந்நிலையில், இந்த வில்லைகளை உபயோகிப்பவர்கள் தமது கண்சிமிட்டலை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் இந்த மதிநுட்ப கண்வில்லையை சிறப்பாக செயற்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஜப்பானிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.