தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கதிரைகளை கைப்பற்ற கூட்டமைப்புக்குள் போட்டிகள் உச்சமடையத் தொடங்கியுள்ளன

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வரலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டமைப்பில் கதிரைகளை கைப்பற்ற போட்டிகள் உச்சமடையத் தொடங்கியுள்ளன. யாழ்.மாவட்டத்திற்கென உள்ள 10 வேட்பாளர்களில் சுரேஸ் தரப்பு இரு சீற்களை பெற்றுள்ளது. அதில் ஒன்றில் சுரேஸ் களமிறங்குகின்ற போதும் மற்றைய வேட்பாளர் பற்றி தகவல்கள் இல்லை.

புளொட் சார்பில் சித்தார்த்தனும் டெலோ சார்பில் சிறீகாந்தாவும் களமிறங்க திட்டமிட்டுள்ளனர். தமிழரசுக்கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மாவை, சுமந்திரன், சிறீதரன் மற்றும் சரவணபவன் களமிறங்கவுள்ளனர். விநாயகமூர்த்தி யாழில் தங்கியுள்ள போதும் அவரிற்கு இடமுண்டாவென்பதில் கேள்வி தொடர்கின்றது.

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளார். தமிழரசுக்கட்சி ஆசனம் வழங்காவிட்டால் சுரேஸ் வழங்குவாரென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஊடகங்களது ஆதரவை அவர் முற்றாக இழந்துள்ள நிலையில் சுரேஸ் தற்போது முடிவை மாற்றிக்கொண்டதாக தெரியவருகின்றது.tna1

குறிப்பாக அனந்தியின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவரை அண்மை நாட்களாக வழிநடத்தும் தென்னிலங்கை நபர்கள் தொடர்பிலான சந்தேககங்கள் ஊடகவியலாளர்கள் அவரை புறக்கணிக்க காரணமாயிருக்கின்றது.

அவரும் ஊடகங்களை விட்டுவிலகி உள்ளமை அதனை உறுதிப்படுத்துவதுடன் மாகாணசபை தேர்தலில் அவரை தூக்கி நிறுத்திய ஊடகங்கள் இம்முறை அவ்வாறு கைகொடுக்கமாட்டாதெனவும் தெரியவருகின்றது. அதேவேளை மாவை உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் அனந்தியை விரும்பவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இதனிடையே சீற் வழங்கப்படாவிட்டால் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பக்கம் போகலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியினில் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் அவரை நேரில் கொழும்பில் அழைத்து பேசியதாக கூறப்படுகின்றது.

தற்போதுள்ள நிலைவரப்படி சுரேஸ்வசமுள்ள ஒரு சீற்றும் தமிழரசுக்கட்சி வசமுள்ள இருசீற்றும் யாருக்கென்ற கேள்வியே பலதரப்புக்களிடமும் எழுந்துள்ளது.

Comments
Loading...