தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடாவின் உயர் அமேசன் (கு)பெஸ்ட் நொவல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஈழ அகதிகள் தொடர்பான நூல்

ஈழ அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் அமேசன் (கு)பெஸ்ட் நொவல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் உயர் அமேசன் (கு) பெஸ்ட் நொவல் விருதின்போது   40ஆயிரம் டொலர் பணம் பரிசாக வழங்கப்பட்டுவருகின்றது.

இந் நிலையில், கனடாவை சேர்ந்த செரோன் பாலா  எழுதிய தெ போட் பீப்பல் என்ற நூலே குறித்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்று சண்சீ கப்பலில் சென்ற  அகதிகளை மையப்படுத்தி  குறித்த நூல் எழுதப்பட்டுள்ளது.

உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து சென்ற அகதிகளின் துன்பங்கள் அந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளன.

மேலும் , கனடாவுக்கு சென்ற பின்னர் குறித்த  அகதிகளின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும்  நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...