தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் 15 பேர் காயமடைந்துள்ளனர்

கனடாவில் Mississauga plaza பகுதியில் இடம்பெற்ற குண்டு  வெடிப்பு சம்பவம் ஒன்றில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள Bambay Bhel என்ற இந்திய உணவகம் ஒன்றிலேயே குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனேடிய நேரப்படி இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அங்கிருந்துகிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் வெளியாகாத நிலையில் மேலதிக  விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments
Loading...