தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடாவில் இலங்கையர் வாழும் பகுதியில் இனவெறி தாக்குதல்!

கனடாவின் பிரபல சீன உணவகம் ஒன்றில் இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் அமைந்துள்ள Saskatoon Chinese உணவகத்தின் மீது ஆசிய நாட்டவர்கள் சிலர் இனவெறி கருத்துக்களை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உணவகம் அந்தப் பகுதியில் ஐந்து வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இவ்வாறான நிலையில் முதன்முறையாக இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு மர்மநபர்களினால் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கனடாவில் ஒரு விதமான இனவெறி காணப்படுவதாக அந்த உணவகத்திற்கு அருகில் வசிக்கும் இலங்கையரான சமில பண்டார தெரிவித்துள்ளார்.

நாங்கள் கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அத்துடன் நாம் அனைவரை ஏற்றுக் கொள்கின்றோம்.

எனினும் கனடாவில் ஒரு வகையான மறைமுக இனவாதம் இன்னும் இருக்கின்றது. வெளியே சென்றால் இவ்வாறானவற்றை அவதானிக்க முடிகின்றது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Comments
Loading...