Designed by Iniyas LTD
கனடாவில் மாவீரர் நாள்! பெரும் எழுச்சியுடன் அனுசரிப்பு!
லண்டனைத் தொடர்ந்து கனடா மார்கம் நகரில் மாவீரர் நாள் பெரும் எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள், தமிழ் உணர்வாளர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்துக்கொண்டு, காலத்தால் அழியாத வீர மறவர்களுக்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி, தேசம் காத்த வீரர்களை நினைவுக்கூர்ந்தனர்.
தேசிய மாவீரர் நாளான இன்று லண்டன், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பெருந்திரலாக ஒன்றுகூடி சர்வதேச சமூகத்திற்கு தங்கள் தேசப்பற்றினையும் விடுதலை உணர்வினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.





