Designed by Iniyas LTD
கனடாவில் வெடிகுண்டு தயாரித்த ஐ எஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை!
கனடா நாட்டின் ஆண்டிரியோ பகுதியை சேர்ந்தவர் ஆரோன், டிரைவர். இவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அனுதாபி என்றும் தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிகுண்டு பொருட்களை தயாரித்தார் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்கா போலீசான எப்.பி.ஐ கனடா போலீசாரிடம் வீடியோ ஆதாரம் அளித்திருந்தது. அதில் ஆரோன் தனது வீட்டில் வெடி பொருள்கள் தயாரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
அமெரிக்க போலீசார் அளித்த தகவலின் படி அடுத்த 72 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கனடா போலீசார் உறுதியாக நம்பினர்.
அதனால், தகவல் அறிந்தவுடன் கனடா போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆரோன் தனது தங்கையுடன் டோரோண்டோ நகரின் தெற்கு பகுதியில் 220 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
பின்னர் உடனடியாக போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். ஆரோனை அவரது வீட்டின் முன்பாக டாக்ஸிக்குள் வைத்து போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அதற்கு முன்பாக, போலீசார் அவரை அணுகி பேச முற்பட்ட போது, காரின் பின்புறம் இருந்த வெடி பொருட்களை வெடிக்க செய்தார். இதில் ஆரோனுக்கு லேசாக காயம் ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் தீவிரவாத பதிவுகளை இடுவதாக கிடைத்த புகார்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரோன் டிரைவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் முழு தகவல்களை செய்தியாளர்களிடம் விரிவாக தெரிவித்தனர்.