தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனடா ஓபன்: ஜெயராம், பிரணாய் உள்ளிட்ட 6 இந்தியர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Canada Open 2016கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் அஜய் ஜெயராம், எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்ட 6 இந்தியர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தப் போட்டி கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெயராம் 21-10, 21-12 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டேவிட் ஆபெர்னோஸ்டீரரைத் தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெயராம் தனது காலிறுதியில் மற்றொரு இந்தியரான ஹர்ஷீல் டேனியை சந்திக்கிறார். டேனி தனது முந்தைய சுற்றில் 21-9, 21-18 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான பிரதுல் ஜோஷியைத் தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் எச்.எஸ்.பிரணாய் 21-18, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் கனடாவின் சங்கீர்த்தை தோற்கடித்தார். காலிறுதியில் பிரான்ஸின் பிரைஸ் லெவர்டெப்ஸ் சந்திக்கிறார் பிரணாய். போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாய் பிரணீத் 21-19, 21-12 என்ற நேர் செட்களில் கனடாவின் வெண்காவ் ஷியை வீழ்த்தினார். காலிறுதியில் எஸ்தோனியாவின் ரால் மஸ்டை எதிர்கொள்கிறார் சாய் பிரணீத். ரால், தனது முந்தைய சுற்றில் 21-12, 7-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்தியாவின் குருசாய் தத்தை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி, தன்வி லேடு ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Comments
Loading...