Designed by Iniyas LTD
கனடா சுவிஸ் அழைத்துச்செல்வதாக கூறி குருநகர் அல்லைப்பிட்டி மக்களிடம் பண மோசடி!
கனடா சுவிஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய பிரசாத் என்பவருக்கு இலட்சக்கணக்கான பணங்களை வழங்கி 70 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.இது பற்றி மேலும் தெரியவருவதாவதுபிரசாத் என்னும் பெயர் கொண்ட நபர் ஒருவர் குருநகர் , அல்லைப்பிட்டி மக்களை தமது சகாக்களைக் கொண்டு சந்திப்புக்களை நடத்தி வந்துள்ளார்
கனடா , சுவிஸ் தேசங்களுக்கு அழைத்துக்கொண்டு போவதாகவும் அதற்காக ஒரு இலட்சம் ரூபா பணம் தரும்படியும் கேட்டுள்ளார்
தொடர்புடைய பதிவு
தலா ஒரு இலட்சம் வீதம் சுமார் 70 பேர் இவருடைய பேச்சை நம்பி பணத்தினைக் கொடுத்துள்ளனர்
வருகிற 18 ஆம் திகதி வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியநிலையில் 12 ஆம் திகதியுடன் குறித்த 70 பேர்களுடன் தனது தொடர்பை துண்டித்துள்ளார் பிரசாத்.
குறித்த பிரசாத் என்பவர் 8264001705 என்ற கொமெர்சல் வங்கி கணக்கு இலக்கத்திலேயே தனது வங்கி கணக்குகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் 077 595 9753 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகளை மேற்கொண்டிருந்த நபர் தற்போது அதனை துண்டித்துள்ளார்.
