Designed by Iniyas LTD
கனடா ஸ்காபுரோவில் தமிழ் இளைஞர் ஒருவர் உட்பட இருவர் கைது..
கனடா ஸ்காபுரோ பகுதியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி கடத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்காபுரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுஜன் பாலசுப்ரமணியம் என்ற 19 வயது தமிழ் இளைஞன் மற்றும் Jaspal Bhatti என்ற 22 வயது இளைஞனும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து கொகெய்ன் மற்றும் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் வாகனத்தில் இருந்து கொகோயின், மரிஜுவானா, சிசிலோபின் காளான்கள் மற்றும் மூன்று பத்திரிகைகளும் வெடிமருந்துகளும் கொண்ட SKS 7.62mm துப்பாக்கியும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த ருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.