Designed by Iniyas LTD
கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: தி.மு.க தலைவர் கருணாநிதி
கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,
கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சாகித்ய அகாடெமி விருதுகளை எழுத்தாளர்கள் திருப்பி அளித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பிரதமர் மோடியிடமிருந்தோ, மத்திய அரசிடமிருந்தோ எந்தவிதமான விளக்கமும் இல்லை என்பது கண்டனத்திற்கு உரியது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அரசியலுக்கும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று கருதாமல், மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திடும் அதிகாரம் படைத்தவர்கள் நமக்கென்ன என்று இருப்பது அநீதி என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.