தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கரும்புலி மறவர் படை! காலத்தாலழியாப் படை!

karumpulikalகரும்புலி மறவர் படை

காலத்தாலழியாப் படை

வீரப் பெரும் படை

வீணர ழிக்கும் படை

கால னுருப் படை

கரிகாலன் அரும்படை

காடைய ரஞ்சும் படை

கந்தகம் துஞ்சிய படை

இறப்பிற் கஞ்சா படை

இருப்பு விஞ்சிய படை

துடித் தழிக்கும் படை

வெடிக்கத் தெளிந்த படை

கப்பலு முறித்த படை

தொடர்புடைய பதிவு

கடல்நெறி யுணர்ந்த படை

வானூர்தி பிளந்த படை

வல்லூறு கிழித்தப் படை

சிங்களன் ஒழித்தப் படை

சிறுநரிப் பழித்த படை

எல்லாள னமைத்தப் படை

எந்தமிழ் சிறப்புப் படை

வன்னிய வடிவுப் படை

வள்ளுவ முணர்ந்த படை

காற்றினிற் கலந்த படை

காரிருள் விலக்கும் படை

கரும்புலி மறவர் படை

காலத்தாலழியாப்படை

Comments
Loading...