Designed by Iniyas LTD
கரைச்சி பிரதேச சபைக்கு முன்னால் உள்ள பள்ளத்தை செப்பனிட்டு மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை…
கிளிநொச்சி நகரின் கரைச்சி பிரதேச சபைக்கு முன்னால் உள்ள பள்ளத்தை செப்பனிட்டு மூடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பள்ளத்தில் மழை நீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதோடு, கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுகின்றதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை குறித்த வீதி அதிகளவு பொது மக்கள், மாணவர்கள் பயன்படுத்துகின்ற வீதியாகவும், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, உணவகங்கள் என்பன காணப்படும் வீதியாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.