தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கர்நாடகாவில் தமிழர்களை பாதுகாக்க ஜெயலலிதா வலியுறுத்து!

chv3wdpu4aaa00u-720x480-450x300கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக முதலமச்சர் சித்தராமையாவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதனால் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் கர்நாடகாவில் உள்ள தமிழகர்களின் கடைகள், வாகனங்கள் குறிவைத்து தாக்கப்படுகிறது. பெங்களூருவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதலமச்சர் சித்தராமையாவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் , தமிழக மக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

Comments
Loading...