தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கர்ப்ப காலத்தில் வாந்தியை தடுக்க இயற்கை மருத்துவம்

vomitingகர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுல­ப­மாக கடந்து விடு­வார்கள். ஆனால் பல­ருக்கு இது மிகவும் கஷ்­ட­மாக இருக்கும். அதற்கு காரணம் வாந்­தியும் குமட்­டலும் தான்.

குறிப்­பிட்ட சில வாச­னைகள், சில உண­வுகள், சோர்வு, பதற்றம், உணர்ச்­சி­மிக்க வயிறு, விற்றமின்கள் குறை­பாடு ஆகிய கார­ணங்­க­ளாலும் கூட வாந்­தியும் குமட்­டலும் ஏற்­ப­டு­கி­றது.

குமட்­டலும் வாந்­தியும் அன்­றாட பழக்­க­வ­ழக்­கங்­களை வெகு­வாக பாதிக்கும். எளிய சிகிச்­சைகள் மற்றும் வாழும் முறையில் சில மாற்­றங்­க­ளோடு கர்ப்ப காலத்தின் வாந்­தியை தடுக்க உதவும் உண­வுகள்:

தண்ணீர் குடி­யுங்கள் வாந்தி, குமட்டல் என வந்­து­விட்டால் தண்ணீர் தான் சிறந்த மருந்­தாக விளங்கும்.

ஒவ்­வொரு மணி நேரத்­திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பெண்­க­ளுக்கு வாந்­தியும் குமட்­டலும் ஏற்­படும் வாய்ப்­புகள் குறை­வாக உள்­ளது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் உடலை நீர்ச்­சத்­துடன் வைத்­தி­ருக்க உதவும். கர்ப்­பிணித்தாய்மார்­க­ளுக்கு வயிற்றில் உள்ள சிசு­விற்கும் இது முக்­கி­ய­மாகும்.

எலு­மிச்சை

கர்ப்ப காலத்தின் போது ஏற்­படும் வாந்­தியை கையாள எலு­மிச்­சையும் உதவும். அதன் இத­ம­ளிக்கும் வாசனை குமட்­டலை குறைத்து, வாந்­தியை தடுக்கும். கூடு­த­லாக விற்றமின் சி கர்ப்­பிணித் தாய்க்கும் வயிற்றில் உள்ள சிசு­விற்கும் மிக நல்­ல­தாகும்.

எலு­மிச்சை ஒன்றை ஒரு டம்ளர் தண்­ணீரில் பிழிந்து, அத­னுடன் கொஞ்சம் தேனை சேர்த்துக் கொள்­ளுங்கள். இதனை தினமும் காலையில் குடித்து, வாந்தி மற்றும் குமட்­டலை தடுத்­தி­டுங்கள்.

வாந்தி அல்­லது குமட்டல் உணர்வின் போது எலு­மிச்சை துண்­டு­களை முகர்ந்து கொள்­ளலாம். எலு­மிச்சை மிட்­டா­யும்­கூட உதவும்

புதினா

கர்ப்ப காலத்தின் போது ஏற்­படும் குமட்டல் மற்றும் வாந்­தியை குறைக்க உதவும் மூலி­கை­களில் புதி­னாவும் ஒன்­றாகும்.

புதி­னாவை ஒரு கப் வெந்­நீரில் போட்டு, 5–- 10 நிமிடம் மூடி வைத்து வடி­கட்டி அதில் சர்க்­கரை தேன் கலந்து காலை எழுந்­த­வுடன் பரு­கலாம்.

சில பெண்­க­ளுக்கு புதினா வாசனை குமட்­டலை தூண்­டலாம். அவர்கள் இதனை தவிர்க்­கவும்.

பெருஞ்­சீ­ரகம்

கர்ப்ப காலத்­தின்­போது செரி­மா­னத்தை மேம்­ப­டுத்தி, வாந்தி எடுக்கும் உணர்வை குறைக்கும். கூடு­த­லாக வாசனை மிக்க இது வயிற்­றுக்கு இத­ம­ளிக்க உதவும்

கொஞ்சம் பெருஞ்­சீ­ர­கத்தை படுக்­கையின் அருகில் வைத்­துக்­கொண்டு, குமட்டல் ஏற்­ப­டும்­போது அதனை வாயில் போட்டு மெல்­லவும்.

1 ஸ்பூன் பெருஞ்­சீ­ர­கத்தை ஒரு கப் வெந்­நீ­ருடன் சேர்த்து கொதிக்க வைத்து, ஆற விட்டு வடி­கட்டி, அத­னுடன் சிறி­த­ளவு எலு­மிச்சை ஜூஸ் மற்றும் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் மெதுவாக குடிக்கவும்.

எலுமிச்சை, புதினா, பெருஞ்சீரகம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தியை கட்டுப்படுத்தும்.

Comments
Loading...