Designed by Iniyas LTD
கலன அமுனுபுரவை திருப்பி அழைத்துக் கொள்ளும் விடயத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை…
லெப்.கேணல் கலன அமுனுபுரவை, ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று திருப்பி அழைத்துக் கொள்வதாக, சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், லெப்.கேணல் கலன அமுனுபுரவை உடனடியாகத் திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா செயலகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது..
தொடர்புடைய பதிவு
“ஐ.நாவின் ஆலோசனைக்கு அமைய, ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் இலங்கை படையினரை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து, 2016இல், லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலிக்கு அனுப்ப ஐ.நா இணங்கியிருந்தது.
நான்கு இராணுவ அதிகாரிகளின் பட்டியலில் இருந்து, ஏனைய மூவரையும் நீக்கி விட்டு, ஐ.நாவே லெப்.கேணல் கலன அமுனுபுரவை தெரிவு செய்திருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
இந்நிலையில் லெப்.கேணல் கலன அமுனுபுரவை திருப்பி அழைத்துக் கொள்ளும் விடயத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.” என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது