Designed by Iniyas LTD
கல்கத்தா பாடசாலை மீது துப்பக்சூடு! ஒருவர் படுகாயம்
மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தா நகரில் மிகவும் பிரசித்திபெற்ற லோரென்ட்டோ என்ட்டாலி என்ற தனியார் பள்ளிக்கூடம் உள்ளது.
தொடர்புடைய பதிவு
இன்று காலை பள்ளிக்கு மாணவ-மாணவியர் நுழைந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் தங்களது கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர்.
இதில் அங்கு நின்றிருந்த ஒருவர் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். படுகாயமடைந்த அந்நபர் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான பொதுமக்களும், போலீசாரும் குவிந்துள்ளதால் இச்சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.