தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கழிவுநீர்த் தொட்டி உடைந்த விபத்து குறித்து ஆய்வு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர்த் தொட்டி உடைந்ததால் ஏற்பட்ட விபத்து குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவர் கந்தன் உத்தரவின் பேரில், நால்வர் குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வினைத் தொடர்ந்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்திடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.sump-leather-factory

முன்னதாக விபத்துக்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியற்றிற்கு மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே, விபத்துப் பகுதியில் தேங்கிக் கிடந்த கழிவுகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கிவரும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் தொட்டி உடைந்ததில், அந்த கழிவுகளில் சிக்கி 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...