Designed by Iniyas LTD
கஷ்மீரில் இந்- இராணுவம் மீது மீண்டும் தவிரவாதிகள் தாக்குதல்!
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா மாவட்டத்தில் லாங்காடே ராணுவ முகாமை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று காலை 6.30 மணியளவில் வழக்கம் போல் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டப்போது ராணுவ முகாமிற்கு வெளியே கிட்டதட்ட 15 நிமிடங்கள் துப்பாக்கி சூடு அரங்கேறியது.
ஹன்ந்வாராவில் 30 வது ராஷ்டிரீய ரைபிள்ஸ் முகாமில் உள்ள பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் இந்த துப்பாக்கி சூடை நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.