Designed by Iniyas LTD
காங்கிரசில் இணைந்துள்ளார் நடிகை குஷ்பு
டெல்லியில், திரைப்பட நடிகை குஷ்பு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, இந்தியாவின் ஒற்றுமைக்கான ஒரே கட்சி காங்கிரஸ் தான் என கூறினார்.
தற்போது தாம் உரிய இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் உரிய பொறுப்புகள் கொடுத்தால் கடமை ஆற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். மேலும் திமுகவில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூற முடியாது எனவும் நடிகை குஷ்பு தெரிவித்தார்.