தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும்

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

சின்டேமராட்டிய மாநிலம் சோலாப்பூரில் நேற்று இளைஞர் காங்கிரசார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷில் குமார் ஷிண்டே(சோலாப்பூர் எம்.பி.)  சமீபத்தில் கடந்த நான்கு மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்கும், எனக்கும் எதிராக பொய்யான தகவல்களை பரப்பிவரும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என்று கூறினார்.

“மின்னனு ஊடங்களில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும். கடந்த நான்கு மாதமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய்யான தகவல்களை மின்னனு ஊடங்கள் பரப்பி வருகின்றன. அவர்கள் அதனை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் நாம் அவர்களின் அத்தகையை நடவடிக்கைகளை நசுக்க வேண்டும்” என்று சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

“புலனாய்வுத் துறை எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இது போன்ற வேலைகளை யார் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும். என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு பின்னால் சில படைகள் செயல்படுகின்றன” என்றும் ஷிண்டே கூறினார்.

சமீபத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போக்கே உள்ளதாக காண்பிக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு ஷிண்டே பேசியுள்ளார். உண்மைகளை கொண்டுவரை மீடியாக்கள் செயல்படவேண்டும். அவை மக்களால் வரவேற்கப்படும். சமூகத்திற்கு துன்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் நாட்டின் பிளவை மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஷிண்டே குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள சுஷில் குமார் ஷிண்டே; டி.வி. சேனல்கள் நான் பற்றி பேசவில்லை என்றும் சோசியல் மீடியாக்களை குறிப்பிட்டே பேசியதாக கூறியுள்ளார்.

Comments
Loading...