Designed by Iniyas LTD
காங்கேசன்துறையில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் தடையங்களை கொண்டு சென்ற வெள்ளைவேன் அணி!
யாழ்.குடாநாட்டினில் ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை அரங்கேற்றிய வெள்ளைவான் அணி தொடர்ந்தும் காங்கேசன்துறைப்பகுதியினுள் பதுங்கியுள்ளமை பற்றி தனக்கெதுவும் தெரியாதென ஸ்ரீலங்கா அரசின் யாழ்ப்பாண மாவட்டப் பிரதி காவல்துறை அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரித்துள்ளார்.
அப்பகுதி கிணற்றுக்குள் இருந்து ஏற்கனவே கடத்தி காணாமல் போகச்செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் நான் எதுவும் அறியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு முறைப்பாடுகள் கிடைத்தால் நாம் விசாரணைகளை மேற்கொள்வோம்.
கடந்த 25 ஆம் திகதி காங்கேசந்துறைப் பகுதியில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட தனியார் காணியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட சில நொடியிலேயே அப்பகுதிக்கு வெள்ளைவானில் வந்த சிவில் உடையிலிருந்த சிலர்; மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளைப் பிடுங்கிச் சென்றிருந்தது தெரிந்ததே.
இந்நிலையினில் அவ்வாறு இலக்கத்தகடுகளை எடுத்து சென்றவர்கள் பற்றி தனக்கேதும் தெரியாதெனவும் அவர் நழுவியுள்ளார்.
அந்த மோட்டார் சைக்கிள்கள் காணமல் ஆக்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.