தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காஞ்சனா 3 – விமர்சனம்

ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், தாத்தா – பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் என அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள்.

போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்க அதில் இருக்கும் பேய், அவர்களுடன் சேர்ந்து வருகிறது.

தாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள்.


பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார்கள்.

இதையடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை போட செல்ல அங்குள்ள அகோரி ஒருவர், அவர்கள் வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி, சில சோதனைகளை செய்யச் சொல்கிறார். அவர்களும் அதனை செய்ய, வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பது உறுதியாகிறது.

ஒரு கட்டத்தில் அந்த பேய் லாரன்சின் உடலை பயன்படுத்திக் கொள்ள, வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வர கடைசியில், என்ன நடந்தது என்பதே காமெடி கலந்த திகிலான மீதிக்கதை.

வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று நாயகிகளுக்கும் கவர்ச்சியுடன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம்.

படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார்.

படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக உருவாகி இருக்கிறது. படத்தின் முடிவில் காஞ்சனா 4-ஆம் வரும் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமனின் பின்னணி இசையும், வெற்றியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

Comments
Loading...