தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல்போனோரின் உறவினர்கள் தமது உறவுகளின் புகைப்படங்களுடனேயே தற்போதும் காத்திருக்கின்றனர்- சமந்தா பவர் கவலை

காணாமல் போனோர் அலுவலகத்தின் உருவாக்கம் உள்ளிட்ட நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் காத்திருக்கின்றனர்.

யுத்திற்கு பின்னர் அதில் பாதிக்கப்பட்டவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் இழந்ததை மீளவும் வழங்க முடியாத போதும் அவர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பதொன்றே அவர்களின் கண்ணியத்தை காப்பதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்தார்.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்திய முன்னிட்டு  வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு சிறப்பபுரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, அமெரிக்கா, ஆகிய இரு நாடுகளுமே கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கிறது. இலங்கை கடந்த காலத்தில் பாரிய அரசியல் நெருக்கடி நிலையை எதிர் கொண்டிருந்தது. அப்போது மக்கள் வீதிகளில் இறங்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு போராடியார்கள். தனியொரு கட்சிக்காகவோ அல்லது தனியொரு நபருக்காகவோ அன்றி நாட்டினுடைய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் தமது எதிர்கால சந்ததியினருக்காவும் அந்த போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அத்ததைய போராட்டங்கள் எந்தவொரு கட்சினாலும் ஒழுங்கு செய்யப்படாமல் சிவில் சமூக அமைப்புக்களாலும் இந்நாட்டு மக்களாலுமே ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. இவ்விடயத்தில் நீதித்துறை சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் செயற்பட்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது. எனவே ஜனநாயக அமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாகவே இரு நாடுகளிலுமுள்ள பிரச்சினைகளை தீர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்றார்.

Comments
Loading...